Showing posts with label ஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம். Show all posts
Showing posts with label ஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம். Show all posts

Monday, November 9, 2009

தமிழில் காமசூத்ரா 4

தமிழில் காமசூத்ரா

தேர்வு செய்தல்...!



திருமணம் செய்து கொள்வதன் நோக்கமே தர்மங்களை நிறைவேற்றுவதுதான்.

அதற்க்கு தேவையான செல்வங்களைத் தேடிக் குவிப்பதும்தான்.



காமம் - குழந்தை பெற உதவுகிறது.



அர்த்தம் - குழந்தைக்கான சொத்துகளைச் சம்பாதிக்க உதவுகிறது...



கன்னித்தன்மை இழக்காத பெண்ணை மணந்து காதலை. பாலுறவு மகிழ்ச்சியை அனுபவித்திரு என்கிறது வேதம். மணவினை எப்படி நிகழ

வேண்டும் என்பதற்க்குப் பல நியமங்களையும் வேத நூல்கள் செய்து வைத்திருக்கின்றன.



  • ஓர் ஆண் தன்னைவிட மூன்று வயதேனும் குறைந்த பெண்ணை மணக்க வேண்டும்.
  • அவளுடைய பெற்றோர் தங்கள் மகளைக் கட்டுப்பாடாக வளந்திருக்க வேண்டும்.
  • அவளுக்கு அத்தைமார், மாமாமார் என்று சொந்த பந்தங்கள் இருக்க வேண்டும்.
  • பெண்ணின் குடும்பம் வசதியாகவும். கௌரவமான தாயும் இருக்க வேண்டும்.
  • அவளுடைய குடும்பத்தவரும் உறவினர்களும் நாட்டில் பிரபலமானவர்களோடு பழக்கம் உள்ளவர்களாயிருக்க வேண்டும். ( கிழிஞ்சுது போ.....)
  • பெண் அழகும், நன்னடத்தையும் கொண்டவளாயிருப்பது அவசியம்.
  • ஆரோக்கியமும், கவர்ச்சியும், தேவை. நல்ல பற்கள், நகங்கள், காதுகள், கண்கள், மார்பகங்கள், ஆகியவை விளக்கமாய் அமைந்திருக்க வேண்டும். உடம்பில் மாசு. மாறு இருக்க கூடாது.

ஓர் ஆண் மகனுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்விக்கிற புனித கடமை அவனுடைய பெற்றோர்களும். உறவினர்களுக்கும்

உண்டு. தங்கள் மகனுக்குப் பெண்ணைத் தரும்படி பையனின் பெற்றோர்கள்

எவ்வகையிலும் முயற்ச்சிக்கலாம். பெண் வீட்டாரிடம் பையனுடய வம்சாவழி. குணநலன் பற்றிப் புகழ்ந்து பேசலாம்.






இரண்டு குடும்பத்தார்கள் மட்டும் தங்களுக்கள் பேசி திருமணத்தை உறுதி செய்து விடக் கூடாது. அவர்களுடைய உற்றார் உறவினர்கள் முன்னிலையில்

அந்த திருமணம் நிச்சயிக்கப்பட வேண்டும். மற்றவர்களின் கருத்தும் அறியப்பட வேண்டும்.



  • ''மணப்பெண் சோம்போறித்தனமுடையவளா. முன்பே வேறொருவனை விரும்பியவளா. ஏறுமாறனவளா நரம்பு கோளாறு உடையவளா என்பதையெல்லாம் சோதித்தறிய வேண்டும்.
  •  பொய்யான கூந்தல் உடையவளை. கோடையில் கை கால் வியர்ப்பவளை ஆணைப்போல் தோற்றம் கொண்டவளை விலக்க வேண்டும். 
  • ஊமையை, கூன் விழுந்தவளை, மிகப்பெரிய ''பிருஸ்டபாகம்  ''கொண்டவளைத் தவிர்க்க வேண்டும்.''
  • ''அமங்கலமான பெயர்கள் உடைய பெண்ணை. ஒரு நதி, மரம் அல்லது நட்சத்திரத்தின் பெயர் கொண்ட வளை மணக்கக் கூடாது. 
  • ''லா'' அல்லது''ரா'' என்று முடிகிற பெயருடைய பெண்ணையும் மணக்க கூடாது. 
  • தன்னைவிட வயதில் மிகவும் இளைய பெண்ணை மணப்பதும் தவறு.
  • குழந்தைப் பருவத்தில் தன்னோடு விளையாடியவளையும் மணப்பது தவறு.



பெற்றோர்கள் தங்களுடைய பெண்ணை சமூக நிகழ்ச்சிகளுக்கும். விழாக்களும் அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுடைய வீட்டில் ஒரு பெண் திருமணத்துக்குத் தயாராயிருக்கிறாள் என்பதை அதன் மூலம் மற்றவர்களுக்குத் தெரியவைக்க முடியும். அந்தப் பெண்ணைத் தங்களுடைய மகனுக்க வரிக்க எண்ணம் குடும்பத்தார் அவர்களுடன் கலந்து பேசி. விருந்துண்ண அது வகை செய்யும்.



தங்களுடைய பெண்ணுக்கு ஏற்ற வரனாக இவன் இருப்பான் என்று உறுதிப்படாதவரை அந்தப் பையனுடைய குடும்பத்தாரிடம் எது பற்றியும் வாக்களிக்கக் கூடாது. எங்கள் உறவினரிடம் கலந்து பேசி இன்னும் சில நாட்களில் பதிலளிக்கிறோம் என்று சொல்லி விடலாம்.



தங்களுடைய நாடு மற்றும் குடும்ப சம்பிரதாயங்களக்க ஏற்ப மணவினை நிகழ்த்தபட வேண்டும். ஒருவர் தம்முடைய இனத்தாருடன் மட்டுமே நட்ப்பு கொள்ளவும். மணம் பேசி முடிக்கவும் வேண்டும். தனது அந்தஸ்தைவிட உயர்ந்த இடத்தில் பெண்ணெடுத்தால் சுய கௌரவத்தை இழக்கும்படி ஆகும்.

ஒரு வேலைக்காரனைப்போல் நடத்தப்படும் நிலைதான் இருக்கும். தன்னைவிட அந்தஸ்து குறைந்த இடத்தில் பெண்ணெடுத்தால் அவளுடைய குடும்பத்தை கொடுமைப்படுத்த நேரிடலாம். சம அந்தஸ்து இல்லாத திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.



தொடரும்..

ஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்


ஃபாத்திமாவுக்கு
எதாவது முக்கியமான வேலையாக இருக்கும்

போதுதான் தலையை வலித்துக்கொண்டு வரும்.
டாக்டரிடம் போகவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வேலை
காரணமாக தள்ளிப் போட்டுவிடுவாள். ஃபாத்திமா படும்
அவஸ்தையைக் கண்டு, அவளது தாய் ஜெமிலா வெங்காயத்தை
கல்லில் நசுக்கி மைபோல் அரைத்து நெற்றிப்பொட்டில்
பத்தாகப் போட்டுவிட்டாள். வெங்காயப் பத்துக்
காயக்காய தலைவலி பறந்துவிட்டது. வெங்காயத்திற்கு
அப்படியொரு அபார சக்தி உண்டா என்று ஃபாத்திமா
ஆச்சரியப்பட்டு விட்டாள். வெங்காயத்தின் மருத்துவ
குணங்கள் கேட்கக் கேட்க
ஆச்சரியம் தரும். அதைப் பற்றி நமது மருத்துவர் இங்கே விளக்குகிறார்:



"வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப்
பொருளாகும். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் வெங்காயத்தைப்
பயன்படுத்தி வந்திருக்கின்றனர். தென் இந்தியர்களும் பழங்காலம் முதலே
பயன்படுத்தி உள்ளனர்.
அரேபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறார்கள். இன்றும்

கப்ஸாவோடு வெங்காயம் இருக்கத் தவறுவதில்லை. நேபாளத்தில் வெங்காயம்
கடவுளுக்கு நிவேதனம் செய்யவதாகச் சொல்கிறார்கள். யூதர்கள்
முற்காலத்திலேயே பயன்படுத்தி இருக்கின்றனர்.
அல்குர்ஆனில் (2:261) வெங்காயமும் சொல்லப்பட்டுள்ளது.

மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் வெங்காயத்தின்
பயனைப் பற்றிக் கூறியுள்ளார். அமெரிக்கரும்,
இங்கிலாந்து நாட்டவரும் சிறந்த நோய் தீர்க்கும்
ஒன்றாக வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்கள்.



வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் 'அலைல் புரோப்பைல் டைசல்பைடு'
(Allyle Propyle Disulphide) என்ற எண்ணெய் ஆகும்.
இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில்
பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம்,

பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத் தான்
தருகின்றன.



வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே,

நம் உடம்புக்கு ஊட்டச்சத்து தருகிறது. பல்வேறு நாடுகளில் வெங்காயத்தை
மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது
பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் பிரதான இடத்தை
வகிக்கின்றது. பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள், வெங்காயத்தின்

மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயம் பல்வேறு நோய்களை குணமாக்க வல்லது. இதய சக்தியைத் தருகிறது.

நரை, தலை வழுக்கையைத் தடுக்கும். உடல் வெம்மையைத் தணிக்கும். இரத்த
விருத்தி, எலும்புக்கு வலிமை அளிக்கிறது. பித்த
நோய்கள், கண் நோய்கள், வாத நோய்களை குணமாக்குகிறது.

 

இனி... வெங்காயத்தை எந்தெந்த
முறையில் பயன்படுத்தினால் என்னென்ன பயன்களை

நாம் பெறலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.



1) நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து
அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.



2) சம அளவு வெங்காயச் சாறையும், வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து

காதில் விட, காது வலி குறையும்.



3) வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி,

இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.



4) வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து

சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப் பாலுடன் சேர்த்துச்
சாப்பிட, எல்லாவிதமான
மூலக்கோளாறுகளும் நீங்கும்.



5) வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட,

உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.



6) வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து
மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல்
வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.



7) வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை மோரில்

விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.



8) வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும்

வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி
குறையும்.



9) வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து உண்ண, உடல் வெப்பநிலை சமநிலை

ஆகும். மூலச்சூடு குறையும்.



10) வெங்காயத்தை அவித்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல்

பலம் ஏறும்.



11) வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட

ஆண்மை பெருகும்.



12) வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி

குணமாகும்.



13) படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.



14) திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை

தெளியும்.



15) வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,

குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும்.



16) வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும்.





17) பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர,
மேக நோய் நீங்கும்.



18) வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட,

மேகநோய் குறையும்.



19) வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது. எனவே, குண்டானவர்கள்

தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.



20) பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில்

கலந்து சாப்பிடுவது நல்லது.



21) வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது.

ஜீரணத்திற்கும் உதவுகிறது."