Showing posts with label கோழிப்பண்ணை ஓனர். Show all posts
Showing posts with label கோழிப்பண்ணை ஓனர். Show all posts

Thursday, November 5, 2009

கோழிப்பண்ணை ஓனர்

கோழிப்பண்ணை ஓனர்

கோழிப்பண்ணை ஓனரும் ஒரு பெண்ணும்...

ஒரு பைவ்ஸ்டார் ஹோட்டலின் ஹைகிளாஸ் பார் ஒன்றில் கோழிப்பண்ணை முதலாளி ஒருவன் நுழைந்தான். எல்லா டேபிளும் நிறைந்திருக்க, ஒரு டேபிளில் ஒரு பெண் மட்டும் இருப்பதை பார்த்து அந்த டேபிளில் அமர்ந்தான்.
வெயிட்டரிடம், "கூலா ஒரு கிங்-பிஷ்ஷர் ப்ளஸ் லாலிபாப்" என்று ஆர்டர் செய்தான். அருகிலிருந்த பெண், "நானும் இதையே தான் ஆர்டர் செய்திருக்கிறேன்" என்றாள்.
இவன்:"அப்படியா! நான் இன்றைக்கு ரொம்பவும் ஹாப்பியாக இருக்கேன்! அதனால் தான் வந்தேன்"
அவள்:"நானும்! ரொம்ப நாளா எங்களுக்கு குழந்தை இல்லாம இருந்தது. இன்னைக்கு தான் நான் கன்ஸிவ் ஆனது கன்பர்ம் ஆச்சு"
இவன்:"அட! இதுல கூட என்ன ஒற்றுமை! என்னோட பண்ணையில ரொம்ப நாளா முட்டை கோழிகள் முட்டை சரிவர போடுவதில்லை! இன்னைக்குதான் நிறைய கோழிங்க முட்டை போட்டுதுங்க"
அவள்:"எப்படி திடீர்னு?"
இவன்:"நான் சேவல்கோழிகளை மாத்திப்பார்தேன்! வொர்க் அவுட் ஆயுடுச்சு!"
அவள்:"இதுல கூட நமக்குள்ள என்ன ஒற்றுமை! நானும் அதையே தான் செஞ்சேன்"
"சியர்ஸ்!!"