Showing posts with label தமிழ் ஜோக்ஸ்- Tamil Jokes. Show all posts
Showing posts with label தமிழ் ஜோக்ஸ்- Tamil Jokes. Show all posts

Thursday, November 5, 2009

தமிழ் ஜோக்ஸ்- Tamil Jokes

உங்களை கணவராக அடைய நான் கொடுத்து வைத்தவள்...உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்
***********************
என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய். வீட்டில் இன்னொரு ஜோடியும் இருக்கிறது
***********************
இதென்ன அரசே போரே நிகழாத போது தங்களுக்கு விழுப்புண்ணா ? இல்லை அமைச்சரே! அரியாடனத்திலே தடுக்கிக் கீழே விழுந்ததால் ஏற்ப்பட்ட புண்... அதனால் ...
***********************
கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?.... இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.
***********************
இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. .. நீங்க கேட்டீங்களா? ... நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...
***********************
இதுவரை எத்தனை இலையான் அடித்தாய்?..மூன்று, இரண்டு ஆண். ஒன்று பெண்.ஆண், பெண் என்று எப்படிக் கண்டு பிடித்தாய்? பியர் போத்தலின் மேல் இரண்டு ...
***********************
கண்ணே! நான் உன்னை என் மனச் சிறையில் வைத்திருந்தேன், உன் அப்பா என்னை மத்திய சிறையில் வைத்துவிட்டார்.
***********************
நாம ஓடீப்போயிடலாமா ... செருப்பு பிஞ்சுடும் ... பரவாயில்லை போகும்போது தச்சுக்கலாம்
***********************
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு? அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.
***********************
கோடிக்கோடியா சம்பாதிக்க வழின்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, அது என்னாச்சு? அது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.
***********************
காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது. (செக் பண்ணிவிட்டு டாக்டர்) எனக்கு ஒன்னும் கேட்கலையே? அப்படியா! அப்போ ஏதாவது சிக்னல்ல நின்னிருக்குமோ!
***********************
மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.
***********************
எனக்கு பொழுதே போகமாட்டேங்குது ஸார்... ஏதாவது சினிமாவுக்குப் போகிறதுதானே? ..ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே!
***********************
இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... சிள்வர் ஸ்பூன், பிலாஸ்ரிக் ஸ்பூன் எல்லாம் சாப்பிட்டு பழக்கம் இல்ல டாக்டர்
***********************
படத்துக்கு ஏன் “வாக்கின் இண்டர்வியூ” ன்னு தலைப்பு வைச்சாங்க? அப்பதான் இளைஞர்கள்லாம் அடிச்சுப் பிடிச்சு ஓடி வருவாங்க என்றுதான்
***********************
டார்லிங், ராத்திரி என்ன டிபன்? (கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!... ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.
***********************
இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும். எனக்கு நீச்சல் தெரியாதே. கவலைப்படாதீங்க. குளத்துல தண்ணியே இர ...
***********************
வீட்டுக்கு ஒரு குதிரை இலவசம்னு சொல்லிட்டீங்க, கட்டுப்படியாகாது மன்னா!! வீட்டுக்கு ஒரு குதிரை லட்சியம். ஆனா, ஒரு கழுதை நிச்சயம்னு அறிக்கை ...
***********************
மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?.... வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொ ...
***********************
மன்னா ! நீங்கள் அப்பா ஆகிவிட்டீர்கள் ! பலே! பலே! எந்த பெண் அம்மா ஆகியிருகிறாள் ?
***********************

தமிழ் ஜோக்ஸ்- Tamil Jokes, tamil comedy

தமிழ் ஜோக்ஸ் -

உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
************************
இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா? என்னது இல்லையா? அதுசரி, சும்மாவா சொன்னாங்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!"
************************
ஓட்டினா அது Cyclining அப்படின்னா...Train ஓட்டினா அது training-ஆ?
************************
ஒடுர எலியின் வாலை புடிச்சா நீ கிங்கு .... ஆனா.... ஒடுர புலியின் வாலை புடிச்சா உனக்கு சங்கு!!
************************

இரத்த வங்கிக்குப் போனா இரத்தம் வாங்கலாம்....ஆனா.... இந்தியன் வங்கிக்குப் போனா இந்தியா வாங்க முடியுமா
************************

என்னதான் விடிய விடிய டிவி ஓடினாலும் ..... ஒரு இன்ச் கூட நகராது
************************

நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?
************************

நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே. நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும் நீ ஏண்டா திரும்ப கூப்பிட மாட்டேங்கிறே?
************************

வாழை மரம் 'தார்' போடும் ஆனால் அதை வச்சு நம்மால 'ரோடு' போட முடியாதே!
************************

கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்..ஆனா.. வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா?
************************

பல் வலின்னு வரவங்களோட பல்ல டாக்டர் புடுங்கலாம் ஆனா..கண் வலின்னு வரவங்களோட கண்ண டாக்டர் புடுங்கலாமா?
************************

பாம்பாட்டி பாம்பைக் காட்டி பொழப்பு நடத்றான். குரங்காட்டி வித்தை காட்டி பொழப்பு நடத்றான். நீ மட்டும் எப்படி பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே?
************************

ஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது, தலைவலி மாத்திரையால தலைவலி போயிடுது, ஆனா, தூக்க மாத்திரை சாப்பிட்டா ஏன் தூக்கம் போகமாட்டங்குது?
************************

புள்ளி மான் உடம்பு முழுக்க புள்ளி இருக்கும்.. ஆனா கண்ணு குட்டி உடம்பு முழுக்க கண்ணு இருக்குமா?
************************

ஆடினாதான் மயிலு, பாடினாதான் குயிலு, ஓடினாதான் ரெயிலு, உள்ளப்போனா ஜெயிலு, வெளியில வர பெயிலு... எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு'
************************

ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க ... ஆனா பஸ்ல காசுக் கொடுக்கலன்னா... பஸ் ஓட்டச்சொல்வாங்களா?
************************

விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா ... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
************************

அப்பா அடிச்சா வலிக்கும், அம்மா அடிச்சா வலிக்கும், ஆனா .. சைட் அடிச்சா வலிக்காது
************************

அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?
************************

மண்டையில போடுறது DYE... மண்டைய போட்டா DIE...!!