படிதாண்டும் பத்தினி....
சமீபத்தில் என் உறவுக்கார தம்பதியருக்கு நடுவே நடந்த பிரிவு [ டைவர்ஸ்] என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரிவு ஏற்பட காரணமாயிருந்தது அந்த மனைவிக்கு தன் சக அலுவலக நண்பருடனான நட்புறவு.
நான் பள்ளிப்பருவத்திலிருந்த போது அந்த தம்பதியருக்கு திருமணமான புதிது, எங்கள் வீட்டிற்கு 'விருந்திற்கு' வந்திருந்தபோது அவர்களிடம் காணப்பட்ட காதல் கலந்த தாம்பத்திய வாழ்க்கையில் எங்கு, எப்படி விரிசல் ஏற்பட்டது?
திருமணமாகி 8 வருடங்களான பின்பு, 2 ஆழகான குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணிற்கு ஏன் இந்த திருமணத்திற்கு வெளியிலான தகாத நட்பும், உறவும்?
ஆண்களும் இத்தகைய உறவுகளுக்கு ஆளாவது விதிவிலக்கல்ல என்றாலும், பண்பாடு பிறளாத பத்தினி பெண்கள் படிதாண்டும் அவலம் ஏனோ? என்று சிந்திக்க வைத்தது.
என் குடும்ப நண்பரான மனோத்தத்துவ மருத்துவரிடம் இது குறித்து நான் கேட்டபோது, அவர் என்னிடம் பகிர்ந்துக்கொண்ட கருத்துக்களை இங்கே பதிவிடுகிறென்.
கேள்வி: மனைவியான ஒரு பெண் ஏன் இத்தகைய தவறான நட்பு வலையில் சிக்குகிறாள்? அதற்கான காரணங்கள் என்ன?
மருத்துவர்:பெண்ணின் மனதில் ஏற்படும் தனிமை மற்றும் வெறுமை உணர்வு ஒரு முக்கிய காரணம்.
காதலித்த தருணங்களில், திருமணமான புதிதில் தன்னிடம் அதிக அக்கரை காட்டிய தன் வாழ்க்கை துணை, வருடங்கள் ஓட ஓட, தன்னிடம் செலவழிக்கும் நேரம் குறைந்துவிட்டது என்பதை ஒரு மனைவி திருமணம் ஆகி 8 அல்லது 10 வருடங்கள் கழித்து, அதாவது குழந்தைகளை பெற்று வளர்த்து முழுநேர பள்ளிக்கு அனுப்பிய போதுதான் உணர்கிறாள்.
அதுவரை தன் குழந்தைகள், தன் குடும்பம் என்று இருந்தவளுக்கு இந்த தனிமையுணர்வு அப்போதுதான் தலைத்தூக்குகிறது.
கேள்வி:தனிமையுணர்வு பெரும்பாலும் அனைவரும் ஒரு காலக்கட்டத்தில் கடந்து வரும் ஒன்று, அவ்வுணர்வு மட்டுமே காரணமாக இருக்க முடியுமா?
மருத்துவர்: பெரும்பான்மையான பெண்கள் இந்த தனிமை உணர்வுகளின் தாக்கத்துக்குள்ளாகும் போது முப்பதிலிருந்து நாற்பது வயதுக்குள்ளிருப்பார்கள்,
எப்படி 15 வயதில் ஒரு பெண்ணிற்க்கு ஒத்த வயது பையனின் பார்வை கிரங்கடித்ததோ...
எப்படி 20 வயதில் காதலும், தொடுதலும் அவளுக்கு கிளர்ச்சியை கொடுத்ததோ..
அப்படி இந்த 30 -40 வயதிலும் ஒரு ஆண் துணையின் கரிசனமான வார்த்தையும், அரவணைப்பும் ஒரு இன்பத்தை கொடுக்கிறது.
ஆனால் அந்த அரவனைப்பு அவளுக்கு தன் கணாவனிடிமிருந்து கிடைக்காத பட்சத்தில் அவளுடன் அன்போடு பேசும் மற்றொரு ஆணிடம் வசியப்படுத்துகிறது.
கேள்வி:கணவனின் கவனக் குறைவும், அக்கரையின்மையும் இதற்கு காரணமா?
மருத்துவர்: ஆம் அதுவும் ஒரு முக்கிய காரணம். தன் மனைவி தன் அன்பிற்காக ஏங்குகிறாள் என்று உணராமல் போவதற்கு காரணம்.......தாயான பின் பெரும்பான்மையான பெண்கள் தன் கணவனிடம் அதிக நேரத்தை செலவழிப்பதில்லை. கணவனுக்கும் வருடங்கள் செல்ல செல்ல , இனி இதுதான் குடும்ப வாழ்க்கை போலிருக்கிறது என்று, தன் தொழில், அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்து விடுகிறான்.
பத்து வருடம் தன் கணவனுக்கு, தன் குழந்தைகளுக்கும் சமைப்பதும், உழைப்பதும் மட்டுமே கடமை என்று இருந்த மனைவிக்கு, காலம் தாழ்த்தி கணவன் மேல வரும் காதலை வெளிக்காட்ட தெரிவதில்லை.
சில விஷயங்கள் ஆண்களுக்கு வெளிப்படையாக சொன்னால் மட்டுமே புரியும், அச்சில விஷயங்களை பெண்கள் வெளிப்படுத்த தவறுவதுதான் அடிப்படை காரணம்.
கேள்வி: படுக்கை அறை விரிசல் இதற்கு முக்கிய காரணமென்று சொல்கிறீர்களா?
மருத்துவர்: அதுவும் ஒரு காரணம், ஆனால் அது மட்டுமே காரணமில்லை. சக ஆண்களிடம் பேசி பழகும் இக்காலக்கட்டத்தில், ஒரு பெண் ' அந்த ' உறவுக்காக என்ற எண்ணத்தோடு பழகுவதில்லை. இயல்பான நட்பே நாளடைவில் அரவனைப்பாக, ஆறுதலாக, இதமாக மாறும்போது தான், ஒரு பெண் எல்லை மீறுகிறாள், தன் உணர்வுகளுக்கு அடிபணிகிறாள். ஆண் நட்பில் அவளது முதல் நோக்கம் இதுவல்ல.
கேள்வி: தாம்பத்திய வாழ்வில் நாளடைவில் ஏற்படும் தொய்வினை போக்க ஏதேனும் அறிவுரைகள் தர இயலுமா??
மருத்துவர்: மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையின் ரகசியமே மனம்விட்டு பேசுவதும், அதிக நேரம் தனித்து செலவழிப்பதும் தான்.
'மோகம் முப்பது நாள், காதல் அறுபது நாள்' என்பது "மோகம் முப்பது வருஷம் , காதல் அறுபது வருஷம்' என இருக்க இதோ சில டிப்ஸ்..
1. 'தேன் நிலவில்' எப்படி ஒரு தனிமை தம்பதியர்க்கு புரிதலையும், இன்பத்தையும் அளித்ததோ, அதே மாதிரியான ஒரு தனிமையை திருமணமாகி பல வருடங்கள் சென்றபின்பும் ஏற்படுத்திக் கொள்வது கணவன் மனைவிக்கு ஒரு புது உற்ச்சாகத்தையும், அந்நியோனத்தையும் அளிக்கும்.
[குழந்தைகளை உங்கள் பெற்றோரின் பாதுகாப்பில் விட்டு விட்டு, ஒரு இரண்டு நாள் சுற்றுலா{ இரண்டாம் தேன்நிலவு} போகலாம்]
2.மேற்சொன்ன டிப்ஸ் சாத்தியமில்லையெனில், கணவன் - மனைவி இருவரும் ஒரு நாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துவிட்டு, உங்கள் வீட்டிலேயே குழந்தைகள் ஸ்கூல் சென்றபின் தனித்து நேரம் செலவழிக்கலாம்.[ மதியம் லஞ்சுக்கு இருவர் மட்டும் ஜோடியாக செல்லலாம்]
3.முப்பது வயதில் உங்கள் மனைவிக்கு தன் அழகும், இளமையும் மறைந்துப்போனதோ என்ற உணர்வு மேலோங்கி இருக்கும், அதனால் அடிக்கடி அவர்களை வர்னிக்கவும், பாராட்டவும், உற்ச்சாகப்படுத்தவும் தவற வேண்டாம்.
["எப்படிடா செல்லம், நான் உன்னை பொண்ணுபார்க்க வந்தபோ/ காதலிச்சப்போ இருந்ததைவிட இன்னும் அழகா, நசுன்னு இருக்கிற? உன்னைப்பார்த்தா இரண்டு குழந்தைகளுக்கு அம்மா மாதிரியா இருக்கு, காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரிதான்டா இருக்கிற" - இப்படி அள்ளி விடுங்க ]
---------------------*------------------------------*---------------
[மேற்சொன்ன டிப்ஸில் ப்ராகட்டில் இருப்பது என் கருத்துக்கள்,
இதற்கு மேல் விளக்கமாக, விரிவாக கூற வயதும் அனுபவமும் இல்லை.]
Sunday, November 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment