Tuesday, November 3, 2009

ஜூனியரின் கனவுகள்

ஜூனியரின் கனவுகள்

நம்ம கந்தசாமி ஒரு நாள் படுக்க போகுறதுக்கு முன்னாடி ஜூனியர் அழுதுகிட்டு இருந்ததை பார்த்தான்.

"ஏண்டா அழுவுற?"

"அது ஒண்ணுமில்லை நைனா. அத்தை சாகுற மாதிரி கனவு கண்டேன்"

"அட. உன்னோட அத்தை ஒலகத்துலே எல்லாரையும் சாகடிச்சிட்டு தான்டா கடைசியா சாவா. நீ பயப்படாம தூங்கு"

அடுத்த நாளே ஜூனியரின் அத்தை செத்து விடுகிறாள்.

அடுத்த வாரத்தில் ஒருநாள், ஜூனியர் அதே போல அழுது கொண்டிருக்கிறான். "ஏன்டா அழுவுற?"

"என்னோட வாத்தியார் சாவுற மாதிரி கனவு"

"அடப்போடா. அப்படியெல்லாம் ஆகாது"

அடுத்த நாளே ஜூனியரின் வாத்தியார் மண்டையை போட்டார்.

அதற்கடுத்த வாரம், அதே போல அழுது கொண்டிருந்தான் ஜூனியர். "அடேய்...நாளைக்கு யாருடா சாவப் போறான்?"

"அப்பா..!"

"அடப்பாவி...கடைசியா என்னையே சாவடிச்சிக்கிறியே". புலம்பியவாறே மறுநாள் கோயில் கோயிலாக சென்று சாமியை வேண்டிக் கொண்டேயிருந்தான் கருத்து கந்தசாமி. எப்படியிருந்தாலும் சாவு நிச்சயம் என்று வேறு பயந்தான். அப்படியே ஒரு கோயிலிலேயே படுத்து தூங்கியும் விட்டான். மறுநாள் காலை எழுந்து பார்த்தால், ....அட..சாகவில்லை.

ஜாலியா வீட்டுக்கு போனான்.

அவனது மனைவி அங்கே கத்திக் கொண்டிருந்தாள் :"யோவ், நேத்து எங்கேயா போனா? எதிர்த்த வீட்டுக்காரரு திடீர்ன்னு செத்து போயிட்டாரு!"

No comments:

Post a Comment