Monday, November 9, 2009

தமிழில் காமசூத்ரா 2

தமிழில் காமசூத்ரா
இது காதல் வேதம்
  • தர்மமே அனைத்துக்கும் மூலம். தர்மத்திலிருந்து அர்த்தம் வளர்ச்சியுற்றது காமம் மலர்ச்சி கண்டது. ஓர் இந்துவின்வாழ்கை முறை இம்மூன்றையும் குறிக்கோள்களாய் கொண்டு இயங்கும்.தர்மம் என்பது ஆன்மிக மற்றும் நெறி சார்ந்த கடமைகள். அர்த்தம் என்பது இகழ்வாழ்விற்க்கான பொருள்களும். அறிவும் பெறுதல். காமம் என்பது புலன்களின் இன்பம்.
  • இந்த உலகத்தை படைத்தவர் முதலில் பிரஜாபதி என்றும் பிற்பாடு அவரே பிரும்மா என்றும் அறியப்பட்டார். மக்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி தர்மம், அர்த்தம், காமத்தைக்கொண்டு புனிதப்படுத்தி கொள்வது என்பதை அவர் இலட்சம் பாடல்களில் விவரித்திருக்கிறார்.
  • நம்முடைய மூதாதையான மனுவாகப்பட்டவர் தர்ம உபதேசங்களைச் செய்தார். அதுவே மனுநீதி என்பது. அர்த்தம் பற்றி பிருகஸ்பதி எழுதினார். நந்தி பகவான் காமசாஸ்திரத்தை ஆயிரம் அத்தியாயங்களில் வடிவமைத்தார்.

  • உத்தலாகரின் மகனான ஸ்வேதகேது காமசூத்திரத்தை ஜநூறு அத்தியாயங்களில் உரைத்தார் பாப்ரவ்யர் அந்த ஞானத்தை நூற்று ஜம்பது அந்தியாயங்களில் சுருக்கித் தந்தார். அவை ஏழு தனி தனி தலைப்புக்களில் வகைப்படுத்தப்பட்டன.
  • தியானம், உடலுறவு, காதல், திருமணம், கள்ள உறவு, விலைமகளிர் மற்றும் மோக ஊக்கிகள் ஆகியவை அந்த ஏழுமாகும்.
  • ஒரு கட்டத்திலும். காமத்தை ஒரு கட்டத்திலும் அவன் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நேரத்திற்கு ஒன்று என வைத்து கொண்டால தானே எதையும் உருப்படியாக செய்ய முடியும். அவன் தன்னுடைய சிறுவயதில் அந்த பாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
  • இளமையில் காமத்தையும். முதுமையில் தர்மத்தையும் அனுசரிக்க வேண்டும். இந்த அமைப்பை அல்லது ஒழுங்கை வாத்ஸ்யாயனர் மாற்றினார். தர்மம், அர்த்தம், காமம் இவற்றை நீங்கள் உங்களால் முடிந்த போதெல்லாம். முடிந்த விதத்தில் எல்லாம் செய்யலாம் என்கின்றார்.
  • தர்மம் என்பது வேதத்தில் விதித்தபடி நடப்பது. உதரணமாக புலால் மறுப்பு, யக்ஞம், யோக சாஸ்திரம் பயிலல் மிகச் சிறந்த குருமார்களை அண்டியிருத்தல், அர்த்தம் என்பது கல்வி, வீடு, நிலம், தானியம், கால்நடை, ஆபரணங்கள், ஆடைகள், நண்பர்கள், கலைகள், செல்வம்சேர்த்தல் பற்றியதாகும்.
  • காமம் என்பது உடல், மனம், ஆன்மா ஆனுபவிக்கிற மகிழ்ச்சி. இது ஒரு நுட்ப்பமான உணர்வு கண்கள், நாசி, நாக்கு, செவிகள், சருமம், இவற்றை விழிப்படையச் செய்யும் உணர்வதற்க்கும் உணரப்படுவதற்க்கும் இடையில் காமம் முகழ்கிறது.
  • தர்மமே அனைத்துக்கும் மூலம் என்று முன்பே குறிப்பிட்டோம். அதனால் தர்மத்தை முதலிலும் தர்மத்துக்கு பின் அர்த்தத்தையும், அர்த்தத்துக்குபின் காமத்தையும் அமைத்து கொள்ள வேண்டும்.
  • அர்த்தம் - புற வாழ்க்கை காமம் - அக வாழ்க்கை சம்பந்தப்பட்டது.
தொடரும்....

No comments:

Post a Comment