Monday, November 9, 2009

முத்தத்தை விரும்பும் பெண்கள்

  • முத்தம் என்ற உணர்வுப் பூர்வமான விஷயத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை என அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பெண்கள் முத்தத்தை தங்கள் இணை வாழ்க்கை உறவின் ஒரு அங்கமாகக் கருதுகின்றனர்.

  • காதலை அர்த்தப்படுத்திக் கொள்ளவும், தங்கள் நீண்டகால உறவினை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளவும் அதன் நிலைப்பாட்டை சரி செய்து கொள்ளவும் முத்தத்தையே விரும்புவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

  • முத்தம் ஒரு அவர்களுடைய சந்தோஷத்திற்காக பயன்படுகிறதே தவிர, அவர்களுக்கு முத்தம் என்பது நீண்ட கால உறவினைப் புதுப்பிக்க பயன்படும் ஒன்றாக இல்லை.

  • ஆசை அதிகரிக்கும் போது ஒரு அடையாளமாக அது வெளிப்படுகிறது. ஆண்களும் பெண்களும் முத்தத்தை மிகவும் ரசிக்கிறார்கள் என்றாலும் பெண்களே அதற்கு ஒரு ஆத்மார்த்தமான அர்த்தத்தை கற்பிக்கிறார்கள். முத்தமே இல்லாத உடலுறவைக் கூட ஆண்களால் நிகழ்த்தி விட முடியும்.

  • ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறதாம். எனவே, ஆண்களே புரிந்து கொள்ளுங்கள், உங்கள் இல்வாழ்க்கையில் இணையை நேரம் கிடைக்கும் போதெல்லாம் முத்த மழையால் நனைத்திடுங்கள்.

No comments:

Post a Comment