Monday, December 21, 2009

பெண்கள் மீதான வேறேதும் பாலியல் வன்முறைகள் உண்டா?

சந்தர்ப்பக் கற்பழிப்பு


சந்தர்ப்பக் கற்பழிப்பு எனின் ஒரு பெண் இன்னொருவனோடு மனம் ஒப்பி வெளியே செல்ல ஏற்பாடு செய்கிறாள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் அவளுடன் பாலுறவு கொள்ள விரும்புகிறான். ஆனால் அவளுக்கோ அந்த விரும்பமேயில்லை. அவன் வற்புறுத்துகிறான். தான் ஒரு ஆண் மகன் என்று காட்டிக் கொள்ள விரும்புகின்றான். அவனோடு வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பாத காரணத்தால் மௌனமாக இருக்கின்றாள். அவளுடைய மறுப்பையும் கூட சம்மதத்தின் அறிகுறியாகக் கருதி பாலியல் உறவில் பலாத்காரமாக ஈடுபடுகிறான். இத்தகைய பாலியல் உறவை சந்தர்ப்பக் கற்பழிப்பு என்பர்.




திருமணக் கற்பழிப்பு (தாம்பத்தியக் கற்பழிப்பு)


மனைவி விரும்பாத போது கணவன் பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்துவது. திருமணம் செய்துகொண்டபடியால் கணவன் தான் விரும்பும் போதெல்லாம் பாலியல் உறவுக்கு மனைவி இணங்க வேண்டுமென்று கருதுகிறான். இலங்கைச் சட்டம் இத்தகையதை ஒரு குற்றமாகக் கருதுவதில்லை. திருமணமான கணவர் மனைவி சம்பந்தப்பட்ட உரிமைகள் பற்றி பலவாகப் பேசப்பட்ட போதிலும் கணவனின் தொல்லைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஓடித்தப்பிய பெண்ணை நீதிமன்ற உதவியுடன் மீட்கவும் தொடர்ந்து அவளுடன் பாலுறவு கொள்ளவும் இயலும்.

No comments:

Post a Comment