Monday, December 21, 2009

மாத்திரை எப்படி வேலை செய்கிறது?

மாதவிடாய் வந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு நாளுக்கு ஒரு மாத்திரை வீதம் 23 நாட்களுக்குத் தொடர்ந்து பாவிக்கப்படுகிறது. பிறகு 5 நாட்களுக்கு மாத்திரை ஒன்றையும் பயன்படுத்தாமல் இருந்து மாதவிடாயைச் சந்திக்கிறோம்.

மாத்திரை பயன்படுத்தும் போது முட்டை உற்பத்தி ஆவதில்லை. அதனால் விந்து முட்டையுடன் கருக்கட்டுவதில்லை. இதிலுள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால் சில சமயங்களில் மாத்திரையை உட்கொள்ள மறந்துவிட்டால் கருத்தரிப்பதிலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படும் நிலையை அடைவதில்லை. அதனால் மாதவிடாய் வருவதற்கு முன் மனத்தளர்ச்சி ஏற்படுகிறது. உங்களுடைய நிறையும் சுமார் 5 கிலோகிராம் அதிகரிக்கிறது. மார்பகப் புற்றுநோயும் நாளங்களில் குருதி உறைவும் ஏற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்நிலை நீண்ட நாட்களுக்கு மாத்திரையைப் பயன்படுத்துவதாலும் சிகறட் புகைப்பதாலும் வரக்கூடும்.

ஊசிமூலம் செலுத்தப்படும் கருத்தடை மருந்து என்பதென்ன?

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊசி மூலம் இந்தக் கருத்தடை மருந்து செலுத்தப்படுகிறது.

இந்த முறையிலுள்ள தீங்கு என்னவென்றால் இதனால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்ட போதிலும் உங்களுக்கு மனமாற்றம் ஏற்பட்ட போதிலும் இம்மூன்று மாதகாலங்களுக்கு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ள இயலாது.

இந்தக் கருத்தடை முறையை அரசாங்கம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இதனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உண்டென்று அநேகர் கருதுகிறார்கள்.

No comments:

Post a Comment