ஆம். அநேகமான பெண்கள் பஸ்களில் பிரயாணம் செய்வதை வெறுக்கிறார்கள். ஏனெனில் சில ஆண்கள் பெண்களின் மார்பகங்களையும் புட்டங்களையும் தடவி விளையாடுவதோடு தமது ஆண் குறிகளை அவற்றின் மீது உராய்கிறார்கள். அதோடு பெண்களைப் பழிப்பதோடு பொதுவிடங்களில் அவர்கள் பெண்களைக் கட்டித் தழுவ முயலுகிறார்கள். இச்செயல்களின் நோக்கம் பெண்கள் விரும்பாதபோது அவர்களிடம் நெருங்கி இன்பம் அடைய விரும்புவதேயாகும்.
இத்தகையவற்றை இல்லாது செய்ய வேண்டுமாயின் பெண்களும் ஆண்களும் ஒன்றாகப் பழகும் நிலையும் சமத்துவமும் சமூகத்தில் நிலவி, பெண்கள் உரையாடுவதற்கும் இயலாதவர்கள் என்ற நிலை மாறவேண்டும். இரு பாலாருக்கும் உள்ள இடைவெளி குறுக வேண்டும். அல்லது குறைய வேண்டும். இந்த நிலை வரும் வரை பெண்கள் பலம் பொருந்தியவர்களாகவும் உரிமையோடு பொதுவிடங்களில் நடமாடுவதாகவும் இருந்து கொள்ள வேண்டும். பெண்களை மதித்து நடக்கத் தெரியாத ஆண்களைத் திருப்திப்படுத்த முயலுவதில் பயன் ஒன்றும் இல்லை.
உங்களிடம் ஆதரவானவர்கள் சூழ்ந்து இருக்கும் போது உரத்த குரலில் நடந்தவற்றை எடுத்துக் கூறுங்கள். பெண்கள் அமைதியாகவும் வெட்கப்பட்டும் இருந்தால் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்ந்தும் இருந்து கொண்டேயிருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment