இல்லை. இன்னமும் அநேகம் உள்ளன. சுலபமாகக் காரியம் ஆற்றக் கூடியவற்றை மட்டுமே பயன்படுத்துவோம்.
இவை அனைத்தும் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு மக்கள் எதனைப் பயன்படுத்தினார்கள்?
குடும்பத்தைக் கட:டுப்படுத்த அநேக முறைகளை மக்கள் அந்நாளில் கையாண்டார்கள். அவை எல்லாம் பூரணவெற்றியளிப்பவை அல்ல. முழுச் சமூகத்தையும் நோக்கினால் திட்டமிடப்படாமல் ஏற்பட்ட மக்கட் பேறுகள் மிகக் குறைவே.
சில ஆதிக்குடிகள் தற்காலிக மலட்டுத் தன்மை ஏற்படுத்தக்கூடிய மூலிகைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். அந்த மூலிகைகளைப் பெற்றுக் கொள்வது மிகவும் சிரமமான காரியம். இதனால் நீண்ட காலப் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதோ தெரியாது. அநேகமாகப் பலரும் கையாண்ட முறைகள் சுருதிமுறையும் உச்சக்கட்டம் அடைந்ததும் அகற்றிவிடுவதும் ஆகும்.
சுருதி முறை (Rhythm method) என்பதென்ன?
ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிடாய் நின்று முதல் பத்து நாட்களுக்கு கருமுட்டை உற்பத்தியாகும். அப்பொழுதுதான் கருமுட்டை வெளிவருகிறது. அப்பொழுதுதான் கருக்கட்டுகிறது. முட்டை வெளிப்படும் காலம் சுமார் பத்து நாட்களுக்கு நீடிக்கும்.
பெண்ணிற்குக் கருமுட்டைகள் உருவாகும் போது உடல் வெப்பநிலை சாதாரண நிலையிலிருந்து ஓரிரு பாகை கூடுதலாக இருக்கும். யோனியில் ஏற்படும் திரவக் கசிவுகள் சாதாரணமாய் வழுக்கிப் போவதைக் காட்டிலும் தடித்துக் காணப்படும். ஒரு துளியை எடுத்து பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து அமுக்கினால் நாலைந்து அங்குலம் நீளும்.
சாதாரணமாகத் தம்பதிகள் செய்வது இதுதான். இப்படி முட்டை உற்பத்தி ஆகும் நாட்களைக் கண்டறிந்து அந்த நாட்களில் பாலுறவைத் தவிர்த்துக்கொள்வர்.
பெண்கள் கைகொள்ளும் விரத நாட்களும் இதோடு தொடர்புடையதே. விரத நாட்களில் பாலியல் உறவு கொள்வதில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment