Monday, December 21, 2009

வன்கலவியும் பாலியல் துஷ்பிரயோகமும் (RAPE AND SEXUAL ABUSE)



நீங்கள் ஒரு பெண்ணாயிருந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?




முதலில் மனதில் படிய வைத்துக் கொள்ளுங்கள். தவறு உங்களுடையது அல்லவென்று. ஏனெனில் மிக விரைவில் இச்சம்பவத்தோடு சமரசத்திற்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபடப்போபவரைக் கண்டு புன்னகை புரிவதோ, உரையாடுவதோ தவறில்லை. இன்னமும் கூட இது பெண்ணின் குற்றமேயல்ல.




இந்நிகழ்ச்சி தொடர்பாக வழக்கொன்று பதிய விரும்பினால் பொலிஸ் நிலையத்திற்கு சில நண்பர்களுடனோ, அல்லது பெண்களின் கூட்டத்தோடோ அல்லது பெற்றோருடனோ அல்லது உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது முற்றாக உங்கள் நிலையை விளங்கியவராகவோ இருப்பார்கள் என்று நீங்கள் கருதினால் அவர்களுடனே செல்லுங்கள். உங்கள் குழுவில் ஒரு ஆண்மகனாவது இருத்தல் வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் மட்டும் சென்று வழக்குப் பதிய விரும்பினால் பொலிசார் சிலவேளைகளில் உதாசீனம் செய்து விடலாம். ஆனால் ஆண்மகன் யாராவது இருந்தால் நிலைமையே வேறுதான்.




பாலியல் வல்லுறவை நிரூபிப்பதற்கு காலம் தாழ்த்தாமல் முறைப்பாடு செய்தல் வேண்டும். 24 மணிநேரத்திற்குள் அல்லது 48 மணி நேரத்திற்கு மேல் செல்லக் கூடாது. பயன்படுத்தப்பட்ட ஆடையைத் தோய்க்கவோ மாற்றவோ கூடாது. கவலையான விஷயம் என்னவென்றால் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவரின் பாலியல் திரவத்தோடு உள்ள தொடர்பை பேணிவைத்து வெளிப்படுத்தக் கூடியதாய் இருக்க வேண்டும் என்பதாகும்.






பாலியல் வல்லுறவுக்கான சட்ட வரைவு இதுதான். ஆணின் ஆண்குறி பெண்ணின் யோனிக்குள் புகுத்தப்பட்டு விந்து வெளிவந்திருக்க வேண்டும். யோனியில் விந்துத்திரவம் இல்லாவிட்டால் சட்டப்படி பாலியல் வல்லுறவு நடைபெற்றது என்று ஏற்றுக்கொள்ள இயலாது. ஆனாலும் கூட தாக்கியதாக, பலாத்காரம் செய்ததாக பெண்மைக்குப் பாதிப்பு விளைவித்ததாக முறைப்பாடு செய்யலாம். இந்த முதன் முறைப்பாட்டு அறிக்கைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர் வைத்திய சாலைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்படுவார். முதன் முறைப்பாட்டு அறிக்கையின் பிரதி ஒன்றை வைத்திருக்க வேண்டும்.




பொலிசுக்குச் சென்று முறைப்பாடு செய்யத்தான் வேண்டுமா?




இல்லை. பாதிப்பை விளைவித்தவரை நன்கு தெரியுமாயின் அதோடு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாரின் ஒத்தாசை இருக்குமாயின் விஷயத்திற்கு முடிவு கண்டுவிடலாம்.




சில பெண்கள் முறைப்பாடு செய்தாக வேண்டும் என்று கருதுவது பயன் எதனையும் தாம் பெறலாம் என்பதற்காகவல்ல. இப்படிப்பட்ட நிலைமை வேறெந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக. அநேக பாதிப்பிற்குள்ளானவர்கள் மனம் தளர்ந்து போய் உடனடியாகத் தமது வீட்டைச் சென்றடையவே விரும்புகிறார்கள். நடந்தவற்றை எல்லாம் முற்றாக மறந்துவிட்டு இப்படிப்பட்ட சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்று கருதுகிறார்கள்.




பாலியல் வன்கலவி செய்வோரிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன?




எந்தச் சந்தர்ப்பத்திலும் பகல் வேளையிலும் தனித்துச் செல்லாதீர்கள். வேறு யாராவது வீதியிலோ, பூங்காவிலோ இருந்தால் பாலியல் வல்லுறவு புரியவுள்ளோர் உங்களை அணுக அஞ்சுவார்கள்.




தனிவழியில் செல்ல நேர்ந்தால் பயந்தது போலவோ மனம் தளர்ந்து இருப்பதாகவோ காட்டிக்கொள்ளக் கூடாது. ஏனெனில் இத்தகையோர் அவர்களின் கவர்ச்சிக்குள்ளாகுகின்றனர்.




அச்சமூட்டக் கூடியவருடன் தனிமையில் இருப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அநேகமான வல்லுறவுகள் வீட்டிலேயே இடம்பெறுகின்றன. பாதகம் செய்வோரில் பெரும்பாலானோர் முதிய உறவினரோ குடும்ப நண்பரோ தான். உங்கள் பெற்றோருக்கு நன்கு அறிமுகமான ஒருவரால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது என்று தெரிவித்தால் நம்ப மறுப்பார்கள். உங்கள் மீது பழியைச் சுமத்துவார்கள்.








முதலில் பாதகம் செய்ய வருவோரைத் தாக்க முயலாதீர்கள். அவர்களை வன்முறைக்குத் தூண்டியவர் ஆவீர்கள். நீங்கள் வெறும் வல்லுறவுகுள்ளாக்கப் படுவதோடு மட்டும் ஆளாகாமல் தாக்கப்பட்டோ சில வேளைகளில் கொல்லப்பட்டோ விடுவீர்கள். இவற்றைக் கூடியவரை தவிர்க்க முயல வேண்டும்.


No comments:

Post a Comment