அவள் பிறந்ததிலிருந்தே சோகமாகக் கழிந்த நாட்கள் கடந்த 2 மாதம் தானாம் தேர்வுக் காரணமாக நான் அவளைப் பார்க்கவேயில்லை.. 10 நாளுக்கு ஒரு முறை அவள் என் வீட்டிற்கு வருவாள் ஒரு 15 நிமிடம்தான் அப்புறம் நான் படிக்கப் போய்விடுவேன். அதனால் இனி கல்யானம் வரை கால எழுந்ததும் வந்துவிடுவாளாம்.. இரவு தூங்கத்தான் அவள் வீட்டிற்குச் செல்வாளாம்.. அவள் பெற்றோரிடமும் என் பெற்றோரிடமும் அனுமதியும் வாங்கியிருந்தாள்.
என் மீது உள்ள ஆசையினால்தானே என் ப்ரியா இதெல்லாம் செய்கிறாள்.. பதிலுக்கு அவள் அசந்துப் போற மாதிரி நானும் ஏதாவது செய்யனும்னு ஆசைப்பட்டேன். நான் எது நினைத்தாலும் என் ப்ரியா என் மீதுக் காட்டும் அன்பிற்கு ஈடாகாதுப் போலத் தெரிந்தது. அன்று இரவு வெகுநேரம் என்ன செய்யலாம் என் யோசித்துப் பார்த்தேன். 3 மாதன்களாக கண்விழித்துப் படித்த அச்தியில் தூங்கிப் போனென். மறுநாள் காலை எழுந்ததும் ப்ரியா வருவதற்குள் கடைக்குச் சென்று ஒரு தங்க செயின் வாங்கினேன். அவள் வந்ததும் அவளுடன் அமர்ந்த்து என் ப்யோடெட்டாவை எழுதினோம். அப்போதெல்லாம் கம்ப்யூட்டர் கிடையாது. எலெக்டானிக் டைப்ரைட்டர் தான்.. பயோ டேட்டாவை எழுதி எடுத்துக் கொண்டு ஒரு டி.டி.பி சென்ட்டரில் எலெக்டானிக் டைப்ரைட்டரில் கொடுத்து டைப் செய்யக் கொடுக்கப் போனோம். அடுத்த நாள் காலையில் வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்.
பின் அங்கிருந்து பெசன்ட் நகர் அக்ஷ்டலட்சுமி கோவிலுக்குச் சென்றோம். அங்கே நான் வாங்கிவந்த செயினை தெய்வத்தின் சன்னதியில் அவள் கழுத்தில் அணிவித்தேன். பின் "ப்ரியா ஜனவரி 27ல் எல்லோர் முன் கட்டும் தாலியைவிட நான் இப்ப போட்ட செயினைத்தான் நான் தாலியா நினைக்கிறேன். இது நம் 2 பேருக்கு மட்டுமே தெரிந்த கல்யானம்.. நீயும் நானும் வாழப் போகும் வாழ்க்கையின் முதல் படி. இது எப்பவுமே உன் கழுத்தில் இருக்கனும்" என்றேன்.. ஆனால் உங்களில் எத்தனைப் பேர் நம்புவீர்களோ தெரியாது கிட்டத் தட்ட இதே போன்ற எண்ணத்தோடு என் ப்ரியாவும் எனக்கு ஒரு மோதிரம் வாங்கி வந்திருந்தாள்.. அவளிடம் என் இந்தத் திட்டத்திலும் தொத்தாலும் என் ப்ரியாவை நினைத்து எனக்கு சந்தோசமே.. எனக்கு இறைவன் கொடுத்த கொடை அல்லவா..
லன்ச் சாப்பிட ஏதாவது நான் வெஜ் ஹோட்டல் போகலாமா என்றேன். " இப்பதானேப்பா இது தாலி மாதிரின்னு சொல்லி இந்த செயின் போட்ட அப்பன்னா இது நம்ம மேரேஜ் டே தானே.. இன்னைக்கு நான்வெஜ் வேண்டாம்.. வெஜ் ஹோட்டல் போகலாம்" என்றாள். நான் அதற்கு "விட்டாள் இன்னைக்கு ·பர்ஸ்ட் நைட் வச்சுக்கல்லாம்னு சொன்னாக்கூட சரின்னுடுவியே" என்றேன். அவள் "அருன் நான் தான் உன் கிட்ட ஊட்டியிலேயே சொன்னேனே நீ ஆசைப்பட்டால் நான் என்ன வேனா செய்வேன் தெரியுமாப்பா" என்றாள்.
"ம்ம்ம் பாக்கலாம்பா..இந்த மாதிரி டயலாக் அடிச்சுக்கிட்டே இருந்தால் ஒரு நாள் எக்கச்சக்கமா மாட்டப் போற அப்ப வச்சுக்கிறேன்" என்றேன்.
அந்த டிசம்பர் 20ம் தேதி என் ப்ரியாவிற்கு பிறந்த நாள்.. 19ம் தேதி இரவு 12 மணிக்கெல்லாம் ஒரு சல்வார், ஒரு மெல்லிய ரிங், ஒரு பொக்கே அப்புறம் கிரீட்டிங் கார்ட் சகிதமாக அவள் வீட்டிற்கு சென்றேன். ப்ரியாவின் அம்மாதான் கதவைத் திறந்தார்கள்.. என்னை அவ்வளவு கி·ப்ட்டுடன் பார்த்ததில் அவருக்கு சந்தோசம். " வாங்க அருன்.. ப்ரியா மாடியில் அவ ரூமில் தூங்கிட்டா ஒரு நிமிசம் எழுப்புறேன்" என பிரியாவின் ரூமிற்கு சென்று அவளை எழுப்பி வந்தாள். என்னை அந்த நேரத்தில் எதிர் பார்க்காத ப்ரியா வேக வேகமாக ஓடி வந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.." தேங்க்ஸ் அருன்.. நான் எதிர் பாக்கவே இல்லை.. தேங்க்ஸ்" என்றாள். அவளை மறுநாள் லன்ச்க்கு வீட்டிற்கு வரும்படி அழைத்து விட்டு அவர்களிடம் சொல்லிக் கொண்டு வீடு திரும்பினேன்.
அடுத்த நாள் காலை 10 மணிக்கு நான் வாங்கித் தந்த உடையை அணிந்து ப்ரியா என் வீட்டிற்கு வந்தாள். அம்மாவிடமும் அப்பாவிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள். அப்போதெல்லாம் டி.வி.யில் தூர்தர்க்ஷன் மட்டும் தான். அதுவும் மாலை நேரம் மட்டும்தான். நான் ப்ரியாவிற்காக கமல் பாடல் அடங்கிய ஒரு வீடியோ கேசட் பரிசளித்தேன். அவள் அதைப் போட்டுப் பாக்கலாமா எனக் கேட்டாள். போட்டதும் "உயர்ந்த உள்ளம்" என நினைக்கிறேன் சரியாக ஞாபகமில்லை கமலஹாசன் பாடிய "நானாக நானில்லை தாயே" பாடல் வந்தது.. அதில் கமல் குடும்பம் சாமி கும்பிடும் போது கமல் மட்டும் சாமியைக் கும்பிடாமல் அவர் அம்மாவைக் கையெடுத்துக் கும்பிட்டப் படி பாடுவார். அதிப் பார்த்ததும் என் ப்ரியா " அருன் இனி நானும் எப்ப சாமி கும்பிடனும்னாலும் உன்னைத்தான் கும்பிடுவேன்" என்றாள். நான் "ப்ரியா அவன் சினிமாக்காக என்ன வெனும்னாலும் எடுப்பான்.. இதுக்கெல்லாம் நாம் எமோக்ஷனல் முடிவு எடுக்கக் கூடாது.. அப்புறம் படிச்சவங்களுக்கும் படிக்காதவங்களுக்கும் வித்தியாசம் என்ன இருக்கு" என்றேன்.
அவள் அதற்கு... "இதில தப்பு என்ன இருக்கு ஏதாவது ஒன்னு நம்மைப் பாதிச்சுதுன்னாசதை ·பாலோ பன்னுவதில் தப்பில்லை" என்றாள்.. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை எங்கள் வீட்டில் சாமி கும்பிடும் போது தீபாராதனையின் போதெல்லாம் ப்ரியா என் பக்கம் திரும்பி நின்று கண்மூடி கைக்கூப்பி வணங்கி நிற்பாள்.
மதியம் எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் அப்போது "பென்டபோர்" அன்ற சா·ப்ட்வேர் கம்பெனியிலிருந்து எனக்கு அஸிஸ்டென்ட் மேனேஜர் அக்கவுண்ட்ஸ் வேலைக்கு ஆர்டர் வந்தது. சம்பளம் 4200 ரூபாய். நான் கவரை வாங்கிப் படித்ததும் ப்ரியாவிடம் போய் "என்ன ப்ரியா நைட் நான் பர்த்டே கி·ப்ட் கொடுத்ததுக்கு தேங்க் பன்ற மாதிரி ரிட்டர்ன் கி·ப்ட் கொடுக்கிறியா" என்றேன். விவரம் புரியாமல் விழிச்சவளிடம் வேலைக் கான் ஆர்டர் வந்ததைச் சொன்னேன். ஜனவரி 20க்குள் வேலையில் சேர சொல்லியிருந்தார்கள். மறுநாள் அந்த கம்பெனிக்கு சென்று ஜனவரி 27 எனக்கு கல்யானம் இருக்கும் விசயத்தைச் சொல்லி இன்னும் 1 மாதம் அவகாசம் வாங்கினேன்.
அது மார்கழி மாதம் என்பதால் ஜனவரி 14ம் தேதிக்கு மேல் முகூர்த்தப் புடவை எடுக்கலாம் என்று இருந்தார்கள். ஜனவரி 14ஆம் தேதிதான் அழைப்பிதழ் கொடுகவும் ஆரம்பிக்கனும். 14ம் தேதி மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் முதல் பத்திரிக்கை வைத்துக் கும்பிடுவதாகவும் 17ம் தேதி காஞ்சிபுரம் சென்று முகூர்த்த சேலை வாங்குவதாகவும் ஏற்பாடு.. ஜனவரி 16 அன்று வருவதாக இருந்த ரிசல்ட் அடுத்த நாள் தான் வரும் என சொல்லிவிட்டாரிகள். இப்போதுப் போல் அப்போது இன்டர்னெட் வசதியெல்லாம் கிடையாது. ·பினான்ஸியல் எக்ஸ்பிரஸ் என்ற நியூஸ் பேப்பரில்தான் ரிசல்ட் வரும். மறுநாள் தான் மார்க் தெரியும். அந்த பேப்பரும் பாம்பேயிலிருந்து காலை 11 மணி விமானத்தில் வரும்.. பின் கடைக்கு வர 1 மணி ஆகிவிடும். அதனால் நான் சேலை எடுக்க வரவில்லை என்று சொல்லி சென்னையிலேயே இருந்துக் கொண்டேன்.
என்னை விட்டு விட்டு தனியாகப் போக என் ப்ரியாவிற்கு மனசே இல்லை.. ஆனால் என் நிலைமையையும் புரிந்துக் கொண்டாள். எதுவும் சொல்ல முடியவில்லை.. மதியம் 1 மணிக்கு ரிசல்ட் வந்துவிட்டது நான் பாஸ் ஆனால் ரேங்க் மார்க் விவரமெல்லாம் மறுநாள்தான் தெரியும். அப்போதெல்லாம் மொபைல் போனும் கிடையாது. என் ப்ரியாவிற்கு நான் பாஸானதைத் தெரிவிக்கக்கூட வழியில்லை. "பென்டபோர்" கம்பெனிக்கு போன் போட்டேன். ஜி.எம் ·பைனாஸிடம் என் ரிசல்ட் பற்றி சொன்னேன். அவர் நான் இன்டர் ·பைனல் இரன்டிலும் முதல் அட்டெம்ப்ட்ல் பாஸானதால் எனக்கு 6000 ரூபாய் சம்பளமும்.. டெபுட்டி மேனேஜர் வேலையும் தருவதாக ஒத்துக் கொண்டார். கூடவே ·பைனலிலும் ரேங்க் வாங்கியிருந்தால் மேனேஜர் வேலையும் 8000 ரூபாய் சம்பளம் என்றும் சொன்னார். 22 வருடங்களுக்கு முன் 8000 ரூபாய் சம்பளம் என்பது இப்போதைய 80,000 க்கு மேல்கூட சொல்லலாம். என் சந்தோசத்தை ப்ரியாவிடம் §க்ஷர் பன்னிக்க முடியலை. வீட்டிற்குச் சென்று குளித்து விட்டு சாமி கும்பிட்டேன். 5 மணிக்கு டி.வி. போட்டேன். சுமார் 6 மணியளவில் ப்ரியாவின் அப்பாவுடைய கார் வந்தது. நான் டி.வி. யை அனைத்து விட்டு என் அரைக்குள் சென்று தூங்குவதுப் போல படுத்துக் கொண்டேன். என் பைக் வெளியே நிற்பதை வைத்து நான் அங்கேதான் இருக்கிறேன் என்பதைத் தெரிந்துக் கொண்ட ப்ரியா கதவுத் திறந்ததும் நேராக என் ரூமிற்கு வந்தாள். நான் படுத்திருந்ததைப் பார்த்து ·பெயில் என் எண்ணியிருப்பாளோ என்னவோ சற்றுத் தயங்கி " அருன்" எனக் கூப்பிட்டாள். நான் தூக்கத்திலிருந்து எழுவதுப் போல கண்விழித்தேன்.. வாடியிருந்த அவள் முகம் பார்த்த கனமே எக்ஸாமில் பாஸ் என சந்தோசமாக சொல்லவும் பின்னாலேயே எங்கள் பெற்றோர் வருவதுப் பற்றிக் கூடக் கவலைப் படாமல் என்னைத் தாவிக் கட்டிக் கொண்டாள்.. என் உதடுகளில், கண்களில், நெத்தியில் என மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.
அதற்குள் எங்கள் பெற்றோரும் உள்ளே வர நான் ரிசல்டை அனைவரிடமும் சொல்லிஇ ஆசி வாங்கினேன். ப்ரியாவின் கண்களில் கண்ணீர் கொட்டியது. அவர் அப்பா "என்னம்மா ஆணந்தக் கண்ணிரா " என்பதற்குள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். "அருன் இன்னைக்கு நீங்க பாஸானதோட ஆண்டவன் புண்ணியத்தில் ·பெயில் ஆகாம இருந்ததுதான் எனக்கு ரொம்ப சந்தோசம்.. தப்பித் தவறி ·பெயில் ஆகியிருந்தால் நாங்க யாருமே கூட இல்லாமல் தனியா எவ்வளவுத் தவிச்சிருப்பீங்க.. உங்கள் சந்தோசத்தில் நான் கூட இல்லாட்டாலும் பரவ்வயில்லை கடைசி வரிஅ உங்கள் சோகத்தில் நான் கூட இருந்து அதைப் பகிர்ந்துக்கனும். இன்னைக்கு முழுக்க நீங்க பாஸ் ஆகனும்னு ஆண்டவனை வேண்டிக்கலை அட்லீஸ்ட் நாங்க வரும் வரை ரிசல்ட் வரக்கூடாதுன்னுதான் வேண்டிக்கிட்டேன்" என்றாள். என் ப்ரியாவின் வார்த்தையில் நாங்கள் அனைவரும் நெகிழ்ந்துப் போனோம். என் அம்மா கண்களில் தாரைத் தாரையாகக் கண்ணீருடன் ப்ரியாவைக் கட்டிக் கொண்டார்.
அடுத்து வந்த நாட்கள் அழைப்பிதழ் கொடுப்பதிலும் கல்யான ஏற்பாட்டிலும் மின்னலாக மறைந்தது. ஜனவரி 27ம் தேதி நான் என் ப்ரியாவை உறவினர் மற்றும் நன்பர்கள் முன்னிலையில் தாலிக் கட்டி கரம் பிடித்தேன். அன்று இரவு "ரெஸ்டன்ஸி " ஹோட்டலில் ஹனிமூன் சூட் ஒன்றில் எங்கள் முதலிரவு ஏற்பாடாகியிருந்தது. இரவு 7 மணிக்கெல்லாம் சாமி கும்பிட்டு பெரியவர்கள் ஆசி வாங்கிவிட்டு காரில் நாங்கள் "ரெஸ்டன்ஸி " நோக்கி பயனமானோம்.
( காதல் பயனம் தொடரும்)
No comments:
Post a Comment